Paristamil Navigation Paristamil advert login

பரபரப்பு காணொளி…! வெளிநாடொன்றில் மூன்று பிரெஞ்சு நாட்டவருக்கு ஏற்பட்ட சோகம்!!

பரபரப்பு காணொளி…!  வெளிநாடொன்றில் மூன்று பிரெஞ்சு நாட்டவருக்கு ஏற்பட்ட சோகம்!!

28 தை 2026 புதன் 07:00 | பார்வைகள் : 1799


சுற்றுலாப்பயணிகளாக வெளிநாடு ஒன்றுக்குச் சென்றிருந்த மூன்று பிரெஞ்சு நாட்டவர்கள் விபத்தொன்றில் சிக்கி பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

25 பிரெஞ்சுக்காரர்கள் கொண்ட குழு ஒன்று மத்தியகிழக்கு நாடான ஓமானுக்கு பயணம் மேற்கொண்டிருந்த நிலையில்,  நேற்று ஜனவரி 27, செவ்வாய்க்கிழமை அவர்கள் படகு ஒன்றில் ஓமானின் மஸ்கட் நகரில் உள்ள ‘சுல்தான் காபூஸ் துறைமுகத்தில்’ இருந்து கடற்பயணம் மேற்கொண்டிருந்தனர்.

2.5 கடற்கிலோமீற்றர் அவர்கள் பயணித்த நிலையில், அவர்களது படகு விபத்துக்குள்ளானது. இதில் மூன்று பிரெஞ்சுநாட்டவர்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் காயமடைந்துள்ளார். ஏனையவர்கள் மீட்கப்பட்டதாக ஓமானிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பான பரபரப்பான காட்சிகளை <<இங்கே>> அழுத்துவதுடன் ஊடாக பார்வையிடமுடியும்..

விபத்து ஏற்பட்டமைக்குரிய காரணங்கள் குறித்து தெரிவிக்கப்படவில்லை. விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்