Paristamil Navigation Paristamil advert login

பாடகரானார் மக்ரோன்! - அதிர்ச்சி வீடியோ!!

பாடகரானார் மக்ரோன்! - அதிர்ச்சி வீடியோ!!

27 தை 2026 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 1692


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தற்போது இணையவாசிகளின் செல்லப்பிள்ளையாகிவிட்டார். அவர் அணிந்த சன் கிளாஸ் பெரும் பேசுபொருளான நிலையில், தற்போது அவர் மீண்டும் ‘வைரல்’ ஆகியுள்ளார்.

கடந்தவாரம் சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்ற சர்வதேச வர்த்தக மாநாட்டின் போது ஆங்கிலத்தில் உரையாற்றிய மக்ரோன், ‘நிச்சயமாக’ எனும் வார்த்தையை குறிக்கும் விதத்தில் ‘for sure’ என இரண்டு தடவைகள் அழுத்தம் திருத்தமாக உச்சரித்தார்.

இந்த ஒலி வித்தியாசமாக இருக்க, அவ்வளவுதான்.. இணையவாசிகள் அதனை பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்த வார்த்தைக்கு A.I இன் உதவியுடன் இசை சேர்த்து ஒரு பாடலாக மாற்றி பகிர்ந்து வருகின்றனர்.

புகழ்பெற்ற பல பாடல்களின் வடிவத்தை மாற்றி ‘மக்ரோன் வெர்ஷன்’ என கலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.

<<இங்கே>> மற்றும் <<இங்கே>> அழுத்துவதன் மூலம் அவற்றில் ஒன்றை பார்வையிட முடியும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்