சன்கிளாஸ் அணிந்த மக்ரோன்! - உலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி!!
21 தை 2026 புதன் 19:03 | பார்வைகள் : 568
"ஐரோப்பா தவறான திசையில் செல்கிறது" என அமெரிக்க ஜனாதிபதி சொனால்ட் ட்ரம்ப் சுவிட்சர்லாந்தின் Davos நகரில் இடம்பெறும் உலக பொருளாதார மாநாட்டில் தெரிவித்திருந்தார். இந்த கருத்து பரபரப்பாகும் அதேவேளை, ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அணிந்திருந்த சன்கிளாஸும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீல நிறத்தில் காட்சிகளை ஒளிரச் செய்யும் கண்ணாடி அணிந்துகொண்டே மக்ரோன் மாநாட்டில் கலந்துகொண்டார். இது அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனை நினைவுகூருவதாக உள்ளது என பிரபல ஊடகங்கள் தங்களது தலைப்புச் செய்தியை தீட்டியுள்ளன.
மக்ரோன் கண்ணாடி அணிந்திருப்பதற்கு மன்னிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டே அவர் உரையை அரம்பித்தார். இருந்தப்போதும் அதற்குரிய காரணத்தை அவர் வெளியிடவில்லை.
அதேவேளை, ஜனாதிபதி மக்ரோன் அண்மைய நாட்களில் எலிசே உள்ளிட்ட இடங்களில் சன்கிளாஸ் அணிருப்பதை மார்க்கக்கூடியதாக உள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan