Paristamil Navigation Paristamil advert login

லூவர் கொள்ளை - புதிய அதிர்ச்சியான வீடியோ ஆதாரங்கள்

லூவர் கொள்ளை - புதிய அதிர்ச்சியான வீடியோ ஆதாரங்கள்

18 தை 2026 ஞாயிறு 18:03 | பார்வைகள் : 1786


லூவர் அருங்காட்சியகத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தின் போது கண்காணிப்பு கமராவில் பதிவான சில காட்சிகள் இன்று ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.

“Sept à Huit” எனும் புகழ்பெற்ற நிகழ்ச்சியில் இந்தவாரம் லூவரில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பான ஆவணப்படம் ‘லூவரின் திருட்டு’ எனும் பெயரில் ஒளிபரப்பாக உள்ளது. அதில் ஒரு அங்கமாக இதுவரை வெளியாகாத புதிய காட்சிகள் வெளியிடப்பட உள்ளன.

88 மில்லியன் யூரோக்கள் பெறுமதியான நகைகளை கொள்ளையிடப்பட்ட இந்த சம்பவம் 2025 ஆம் ஆண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்போது பதிவான இந்த காட்சிகளை Sept à Huit நிகழ்ச்சிகுரிய இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர் அதன் தயாரிப்பாளர்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்