சிகரெட் மற்றும் புகையிலை விலைகள் மீண்டும் உயர்வு!!
17 தை 2026 சனி 21:36 | பார்வைகள் : 2554
2026 பிப்ரவரி 1 முதல் பிரான்சில் சிகரெட்டுகள், சுருட்டும் புகையிலை மற்றும் சிகரில்லோக்களின் (cigarillos) விலைகள் மாற்றம் பெறுகின்றன. British, American Tobacco நிறுவனத்தின் சில சிகரெட் பெட்டிகளுக்கு 20 முதல் 30 சென்ட் வரை விலை உயர்வு ஏற்படவுள்ளது.
News & Co மற்றும் Gauloises பிராண்டுகளுக்கு 40 சென்ட் உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. Winston சிகரெட்டுகளுக்கு 10 சென்ட் விலை குறைப்பு இருக்கும், அதே நேரத்தில் Philip Morris தயாரிப்புகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.
பல ஆண்டுகளாக பிரான்சில் புகையிலை பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருகிறது. 2017 முதல் 2024 வரை சராசரியாக 7% அளவில் புகைப்பழக்கம் குறைந்துள்ளதாக OFDT தெரிவித்துள்ளது. இருந்தாலும், புகையிலை இன்னும் பிரான்சில் தவிர்க்கக்கூடிய மரணங்களுக்கான முதன்மை காரணமாகவே உள்ளது; ஆண்டுதோறும் சுமார் 75,000 பேர் உயிரிழக்கின்றனர், அதில் 46,000 பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan