Prime d’activité உயர்வு,வரி உயர்வு இல்லை, பல்கலைக்கழகங்களில் 1 யூரோ உணவுத் திட்டம்.... பிரதமர் அறிவித்த மாற்றங்கள்!!
16 தை 2026 வெள்ளி 22:15 | பார்வைகள் : 1876
2026 பட்ஜெட்டின் புதிய திடடங்களை பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட் முன்பிருந்ததைவிட சிறந்ததும், பொறுப்பானதுமாக இருப்பதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின்(PIB) 5% ஆக பட்ஜெட் பற்றாக்குறையை குறைப்பதே இலக்கு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் விவாதங்கள் நிலுவையில் உள்ள நிலையில், இந்த பட்ஜெட் எவ்வாறு அமுல்படுத்தப்படும் என்பது இன்னும் தெளிவாக தெரிவிக்காத நிலையில் வருமான வரி உயர்வு எதுவும் இருக்காது என்றும், குறைந்தபட்ச ஊதியத்தின் 1 முதல் 1.4 மடங்கு வருமானம் பெறும் 3 மில்லியனுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சராசரியாக மாதம் 50 யூரோக்கள் Prime d’activité கூடுதலாக வழங்கப்படும்.
பல சமூக உதவிகளை ஒரே நாளில் பெற « ஒருங்கிணைந்த சமூக உதவித் தொகை » அறிமுகப்படுத்தப்படும். மாற்றுத் திறனாளிகள், வீட்டு உதவி (APL), மாணவர் உதவித்தொகைகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான வரி தள்ளுபடி ஆகியவை தொடரும்.
இளைஞர்களுக்கான ஆதரவு அதிகரிக்கப்படுகிறது அதாவது அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக உணவகங்களில் 1 யூரோ உணவு வழங்கப்படும். கல்வி மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும், மேலும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்காக கல்வித்துறையில் 2,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
வீடமைப்பு துறையில், சமூக வீடுகளுக்காக கூடுதல் நிதி வழங்கப்படும், தனியார் வீட்டு உரிமையாளர்களுக்காக புதிய ஒரு சட்ட நிலை (statut) உருவாக்கப்படும் மற்றும் வீட்டை புதுபிக்கும் MaPrimeRénov 2026 பட்ஜெட்டிலும் தொடரும் என்றும் செபாஸ்தியன் லெகோர்னு உறுதிப்படுத்தி உள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan