Paristamil Navigation Paristamil advert login

லூவர் - ஐரோப்பியர்கள் அல்லாதவர்களுக்கு கட்டணம் அதிகரிப்பு!

லூவர் - ஐரோப்பியர்கள் அல்லாதவர்களுக்கு கட்டணம் அதிகரிப்பு!

14 தை 2026 புதன் 14:17 | பார்வைகள் : 2570


லூவர் அருங்காட்சியகத்துக்கு வரும் பார்வையாளர்களில் ஐரோப்பியர்கள் அல்லாதவர்களுக்கு அறவிடப்படும் கட்டணம் அதிகரித்துள்ளது.

சென்ற வருட நவம்பரில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ஜனவரி 14, 2026 புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. 45% சதவீதம் கட்டணம் அதிகரித்து, மேலதிகமாக 10 யூரோக்கள் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த கட்டண அதிகரிப்பினால் ஆண்டுக்கு 15 தொடக்கம் 20 மில்லியன் யூரோக்கள் மேலதிகமாக வருவாய் ஈட்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக கடந்த 2024 ஆம் ஆண்டில் 17 யூரோக்களாக இருந்த கட்டணம் 22 யூரோக்களாக அதிகரித்திருந்தது.

அதேவேளை, château de Versailles அரண்மனைக்கான கட்டணமும் இன்று முதல் 3 யூரோக்களால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்