Paristamil Navigation Paristamil advert login

ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வருமான வரி செலுத்தவில்லை: முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் வருமான வரி செலுத்தவில்லை: முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல்!!

13 தை 2026 செவ்வாய் 22:25 | பார்வைகள் : 527


முன்னாள் பொருளாதார அமைச்சர் எரிக் லொம்பார்ட் (Éric Lombard), வரித்துறையின் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு, பிரான்சில் ஆயிரக்கணக்கான செல்வந்தர்கள் எந்த வருமான வரியும் செலுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார். இவர்களில் பலரின் Revenu fiscal de référence பூஜ்ஜியமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்தக் கருத்துகள், அவர் பதவியை விட்டு விலகிய பின்னர் ஊடகங்களில் வெளிப்படையாக கூறிய முதல் முக்கியமான அறிக்கைகளில் ஒன்றாக இருந்து, அரசியல் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக உயர் சொத்துகளுக்கான வரிவிதிப்பு குறித்து புதிய விவாதம் தொடங்கியுள்ளது.

எரிக் லொம்பார்டின் கூற்றுப்படி, சில செல்வந்தர்கள் சம்பளமாகப் பெற வேண்டிய வருமானத்தை, சமூகக் கட்டணங்களைத் தவிர்க்க ஹோல்டிங் நிறுவனங்கள் (மற்ற நிறுவனங்களில் நிதிப் பங்குகளைப் பெற்று அவற்றின் செயல்பாடுகளை இயக்கும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு நிறுவனம்) வழியாகப் பெறுகின்றனர். இது சட்டபூர்வமான நடைமுறையாக இருந்தாலும், சமூக நீதி இல்லாதது என அவர் விமர்சித்துள்ளார்.

இந்தச் சூழலில், தேசிய சட்டமன்ற நிதி ஆணையத் தலைவர் எரிக் கோக்கரல், இந்தத் தகவல்களுக்கு ஆதாரமான ஆவணங்களை வெளியிடுமாறு நிதி அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் வரித்துறை வரி இரகசிய தன்மையை காரணமாகக் காட்டி கருத்து தெரிவிக்க மறுத்துள்ளதுடன், பெர்சி அமைச்சகமும் இதுவரை பதிலளிக்கவில்லை.

வர்த்தக‌ விளம்பரங்கள்