Paristamil Navigation Paristamil advert login

பாரிய தீயில் சிக்கி ஐவர் பலி! - வேண்டுமென்றே கொழுத்தப்பட்டதாக தெரிவிப்பு!!

பாரிய தீயில் சிக்கி ஐவர் பலி! - வேண்டுமென்றே கொழுத்தப்பட்டதாக தெரிவிப்பு!!

3 மார்கழி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 100


வீடொன்றில் பரவிய பாரிய தீயில் சிக்கி ஐவர் பலியாகியுள்ளனர். முதற்கட்ட விசாரணைகளில் இந்த தீ வேண்டுமென்ற ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்சின் வடகிழக்கு எல்லை மாவட்டமான Meurthe-et-Moselle இல் உள்ள சிறிய Neuves-Maisons கிராமத்தில் இச்சம்பவம் நவம்பர் 30 ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. 16 தொடக்கம் 60 வயது வரையுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தீயில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.

விசாரணைகளை மேற்கொண்ட Nancy மாவட்ட அரச வழக்கறிஞர் அலுவலகம், ‘இது விபத்தல்ல... இந்த தீ வேண்டுமென்றே சமூகவிரோதிகளால் ஏற்படுத்தப்பட்டது.:” என தெரிவித்தனர். 

குற்றச்செயலில் ஈடுபட்டவர்கள் தேடப்பட்டு வருகின்றனர். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர், உறங்கிக்கொண்டிருந்த வேளையில் அதிகாலை 3.20 மணி அளவில் எரியூட்டப்பட்டு கொல்லப்பட்டமை அப்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


 

வர்த்தக‌ விளம்பரங்கள்