Paristamil Navigation Paristamil advert login

ஒன்பது மாதங்களுக்கு மூடப்பட உள்ள மெற்றோ சேவை!!

ஒன்பது மாதங்களுக்கு மூடப்பட உள்ள மெற்றோ சேவை!!

2 மார்கழி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 100


பரிசில் அதிகளவான பயணிகள் கூடும் மெற்றோ நிலையங்களில் ஒன்றான République நிலையத்தின் ஒரு பகுதி ஒன்பது மாதங்களுக்கு மூடப்பட உள்ளது.

République  நிலையத்தில் சேவையில் இருக்கும் 8 ஆம் இலக்க மெற்றோவே இந்த சேவைத்தடையை சந்திக்க உள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜூலையில் இருந்து 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் வரையான காலப்பகுதியில் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்கள் இந்த சேவைத்தடை இடம்பெற உள்ளது. 

பெருமளவிலான திருத்தப்பணிகள் காரணமாக இந்த சேவை தடைப்படுவதாகவும், இதனால் இந்த நிலையத்தை அண்மித்திருக்கும் சில மெற்றோ நிலையங்களும் சேவைத்தடையை சந்திக்க உள்ளன. 4 ஆம். 10 ஆம், 11 ஆம் வட்டாரங்களில் உள்ள நிலையங்களில் உள்ள 8 ஆம் மெற்றோ சேவைகள் மட்டும் நிறுத்தப்பட உள்ளன.

 திருத்தப்பணிகளுக்காக இந்த சேவைத்தடை ஏற்படுவதாகவும், மாற்றீடாக பேருந்துகள் இயக்கப்படும் எனவும் Île-de-France Mobilités அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்