சென்னைக்கு அருகில்.. காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா
1 மார்கழி 2025 திங்கள் 13:13 | பார்வைகள் : 101
காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த டிட்வா புயல் காரணமாக, மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் சென்னையில் மிதமான மழையே பெய்தது.
டிட்வா புயல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலவிய டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இன்று பிற்பகலில் டிட்வா புயல் தாழ்வுப் பகுதியாக மேலும் வலுகுறையும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. சென்னைக்கு 90 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலையில் இன்று பிற்பகலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறையும் என கணிப்பு.
கடலோரப் பகுதிகளில் மட்டும் பலத்த காற்று வீசியதால் குளிர்ச்சியான சூழல். இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்றுடன் கனமழை முடிவடைகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan