தி.மு.க., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷன் பதில்
1 மார்கழி 2025 திங்கள் 12:13 | பார்வைகள் : 100
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தமான, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிராக தி.மு.க., தாக்கல் செய்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் கமிஷன் பதில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை, தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தி.மு.க., சார்பில், அக்கட்சியின் அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாார். விசாரித்த உச்ச நீதிமன்றம் பதிலளிக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டிருந்தது.
தேர்தல் கமிஷன் தாக்கல் செய்துள்ள பதில் மனு:
எஸ்.ஐ.ஆர்., பணி தகுதி இல்லாத வாக்காளர்களை நீக்கவும், தகுதியுள்ள வாக்காளர்களை சேர்க்கவும் நடத்தப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் துாய்மையை நிலை நிறுத்த, சுதந்திரமாக, நேர்மையாக தேர்தல் நடத்த எஸ்.ஐ.ஆர்., அவசியம். இதற்கு எதிராக தி.மு.க., தாக்கல் செய்த மனு விசாரணைக்கு தகுதியற்றது. எஸ்.ஐ.ஆர்., குறித்து தவறான பிரசாரத்தை மேற்கொள்ள, இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிலுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை. இந்த மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதுபோன்ற மனுக்கள், தேர்தல் கமிஷனின் அரசியலமைப்பு கட்டமைப்பு குறித்து தவறான தகவல்களை பொதுமக்களிடம் பரப்புகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan