காஸா குழந்தைகளின் அவலநிலை - இளவரசர் வில்லியம்
30 கார்த்திகை 2025 ஞாயிறு 15:56 | பார்வைகள் : 720
பிரித்தானியாவில் உள்ள தேசிய சுகாதார சேவை மையத்தில், நோய் வாய்ப்பட்ட காஸா குழந்தைகளை இளவரசர் வில்லியம் பார்வையிட்டார்.
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை இதுவரை 70,000த்தை தாண்டியதாக செய்தி வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரசின் மனிதாபிமான பணியின் ஓவர் பகுதியாக, இந்த ஆண்டு செப்டம்பரில் பொது சுகாதார சேவையானது போரினால் பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சையை வழங்கத் தொடங்கியது.
கடந்த 21ஆம் திகதி நிலவரப்படி, பிரித்தானியாவில் 50 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருவதாக, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை புள்ளிவிவரங்கள் தெரிவித்தன.
NHSயினால் (National Health Service) சிகிச்சையளிக்கப்படும் காஸாவில் இருந்து கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளை இளவரசர் வில்லியம் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து, அரண்மனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்து கூறுகையில், "எந்தவொரு குழந்தையும் எதிர்கொள்ளக்கூடாத அனுபவங்களைத் தாங்கிய இந்த குழந்தைகளுக்கு இளவரசர் ஒரு கணம் ஆறுதல் அளிக்க விரும்பினார்.
இவ்வளவு கடினமான நேரத்தில் விதிவிலக்கான கவனிப்பை வழங்கிய NHS குழுக்களுக்கு இளவரசர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க முடிந்தது" என்றார்.
மேலும், "குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் காட்டிய தைரியத்தாலும், தொழில்முறை மற்றும் மனிதாபிமானத்துடன் அவர்களை ஆதரிக்கும் குழுவின் அர்ப்பணிப்பாலும், இளவரசர் நெகிழ்ச்சியடைந்தார்" என்றும் அவர் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
18 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
27 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan