€170,000 யூரோக்கள் பணத்துடன் Montparnasse நிலையத்தில் ஒருவர் கைது!!
30 கார்த்திகை 2025 ஞாயிறு 14:40 | பார்வைகள் : 4014
சந்தேகத்துக்கிடமான ஒருவர் Montparnasse தொடருந்து நிலையத்தில் வைத்து சோதனையிடப்பட்டதில், அவரிடம் இருந்து கிட்டத்தட்ட €170,000 யூரோக்கள் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது.
நேற்று முன்தினம் நவம்பர் 27, வெள்ளிக்கிழமை அவர் கைது செய்யப்பட்டார். துனிசிய நாட்டு குடியுரிமை கொண்ட அவர், கறுப்பு பணத்தை வெள்ளையாக்கும் மோசடி வேலைகளில் ஈடுபடுபவர் என சந்தேகிக்கப்பட்டு, தொடருந்து நிலைய காவல்துறையினரால் ஆறாம் இலக்க நடைமேடையில் வைத்து சோதனையிடப்பட்டார்.
அதன்போது அவர் வைத்திருந்த பையில் €167,040 யூரோக்கள் ரொக்கப்பணம் இருந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அவர் வைத்திருந்த பணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்டனர். அவர் முன் பின் முரணான தகவல்களை தெரிவித்ததால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
குறித்த 30 வயதுடைய நபர் Bordeaux (Gironde) நகர் நோக்கிச் செல்ல இருந்த தொடருந்தில் ஏற பயணச்சிட்டை பெற்றிருந்துள்ளார். அது தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan