15 வயதுச் சிறுவனை எரித்த கும்பல்!!
30 கார்த்திகை 2025 ஞாயிறு 10:35 | பார்வைகள் : 4552
15 வயதுடைய சிறுவன் ஒருவனது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில், இரு நாட்களுக்கு முன்னர் பிரான்சின் தெற்கு நகரான மார்செயில் இருந்து மீட்கப்பட்டது.
மார்செயின் 14 ஆம் வட்டாரத்தின் Arnavaux நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 28, வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி அளவில் குறித்த சடலம் மார்செய் காவல்துறையினரால் மீட்கப்பட்டது. பின்னர் உடற்கூறு பரிசோதனைகளில் அது 15 வயதுடைய சிறுவன் ஒருவனது எனவும், அவன் எவ்வித குற்றப்பின்னணியும் இல்லாதவன் எனவும் தெரியவந்தது.
சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கி சன்னங்களும் மீட்கப்பட்டன. குற்றவாளிகள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர். வளர்ப்பு நாயுடன் நடைபயிற்சியில் ஈடுபட்ட ஒருவரே முதலில் சடலத்தை பார்த்ததாகவும், துப்பாக்கி குண்டு பாய்ந்த தடங்கள் சடலத்தில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச்சூடு மற்றும் எரிப்பு சம்பவம், அண்மையில் இடம்பெற்ற வேறு எந்த குற்றச்சம்பவங்களுடனும் தொடர்புபடவில்லை என முதல்கட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan