பாஜ தேசிய தலைவர் பதவி: தர்மேந்திர பிரதானுக்கு வாய்ப்பு
30 கார்த்திகை 2025 ஞாயிறு 12:14 | பார்வைகள் : 1245
ஒடிஷாவில், தொடர்ந்து 24 ஆண்டுகளாக முதல்வராக இருந்தவர் பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக். கடந்தாண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில், இவர் கட்சியை தோற்கடித்து, பா.ஜ., ஆட்சியைப் பிடித்தது. மோகன் சரண் மஜியை முதல்வராக தேர்ந்தெடுத்தது பா.ஜ., மேலிடம்; இப்போது அவர் ஆட்சி நடத்தி வருகிறார்.
ஆனாலும், அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. காரணம், ஒடிஷாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். தனக்கு முதல்வர் பதவி கிடைக்கும் என, பிரதான் எதிர்பார்த்தார்; ஆனால் மஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இருப்பினும் என்றாவது முதல்வர் பதவியில் அமர்வேன்' என சபதமிட்டுள்ளாராம் பிரதான்.
சமீபத்தில் பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., - -முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.,வின் பொறுப்பாளராக பணியாற்றி, வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தர்மேந்திர பிரதான். பீஹார் வெற்றிக்குப் பின், ஒடிஷா திரும்பினார்.
அவரை வரவேற்க, கட்சியினர் புவனேஸ்வர் விமான நிலையம் செல்லக்கூடாது என முடிவெடுத்த முதல்வர் மஜி, பிரதான் வரும் நேரத்தில் அமைச்சர்கள் கூட்டத்தைக் கூட்டினார். இதனால், பிரதானை வரவேற்க அமைச்சர்களால் விமான நிலையம் செல்ல முடியவில்லை.பிரதானுக்கு பா.ஜ., மூத்த தலைவர்கள் ஆதரவு இருந்தாலும், முதல்வர் மஜிக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளார்.
'இந்த ஆதரவு எத்தனை நாட்களுக்கு என்று பார்த்து விடுவோம்' என, பிரதான் ஆதரவாளர்கள் நம்பிக்கையில் உள்ளனர். இதற்கிடையே, பா.ஜ.,வின் தேசிய தலைவர் பதவி பிரதானுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்ற செய்தியும், டில்லி அரசியல் வட்டாரங்களில் அடிபடுகிறது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan