நேஷனல் ஹெரால்டு வழக்கில் சிக்கல்: ராகுல், சோனியா மீது புதிதாக எப்.ஐ.ஆர்., பதிவு
30 கார்த்திகை 2025 ஞாயிறு 10:14 | பார்வைகள் : 346
நேஷனல் ஹெரால்டு வழக்கில், அமலாக்கத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்பி ராகுல் உட்பட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' என்ற நிறுவனம் வாங்கியது. 'யங் இந்தியன்ஸ்' நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்களான சோனியா, அவருடைய மகன் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர்.
காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இந்த நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ளனர். ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இதை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், 2021ல் ஏற்றுக் கொண்டது. இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, 2021ல் அமலாக்கத் துறை முறைப்படி வழக்கு பதிவு செய்து விசாரிக்கிறது.
இது தொடர்பாக, 751 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கி வைத்துள்ளது. சமீபத்தில் இந்த வழக்கில் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. தற்போது சோனியா, ராகுலுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் புகாரின் பேரில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, காங்கிரஸ் எம்பி ராகுல் உட்பட 6 பேர் மீது டில்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் புதிதாக எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.
பாஜ விமர்சனம்
இது தொடர்பாக பாஜவின் செய்தி தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா கூறியதாவது: நேஷனல் ஹெரால்டு வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இந்த வழக்கில் ராகுல், சோனியாவுக்கு நீதிமன்றம் நிவாரணம் அளிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் ஊழல் செய்கின்றனர்.
கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்கள் போல் பேசுகின்றனர். இது அடக்குமுறை என்று நினைக்கிறார்கள். இவ்வாறு ஷெசாத் பூனவல்லா தெரிவித்தார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan