பிரிட்டனில் இந்திய மாணவர் குத்திக்கொலை; உதவி கோரி குடும்பத்தினர் கண்ணீர்
30 கார்த்திகை 2025 ஞாயிறு 08:14 | பார்வைகள் : 1070
பிரிட்டனில் படித்து வந்த இந்திய மாணவர் விஜய் குமார் ஷியோரன் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். ஹரியானா மாநிலத்தில் வசிக்கும், இவரது சகோதரர் ரவிக்குமார் உதவி கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிரிட்டனின் வொர்செஸ்டரில் 30 வயதான இந்திய மாணவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இவர் ஹரியானா மாநிலத்தின் சர்கி தாத்ரி கிராமத்தை சேர்ந்த விஜய் குமார் ஷியோரன் என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில், கலால் மற்றும் சுங்க வாரியத்தில் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, உயர் படிப்புக்காக விஜய் குமார் ஷியோரன் பிரிட்டன் சென்று இருக்கிறார். அவர் அங்கு தங்கி படித்து வந்தார். தற்போது இவர், அங்கு கொல்லப்பட்டு உள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து பிரிட்டன் அரசு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஹரியானா மாநிலத்தில் வசிக்கும், இவரது சகோதரர் ரவிக்குமார் உதவி கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்த சம்பவத்தால் எங்கள் குடும்பம் மிகவும் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. இந்தியாவில் இறுதிச்சடங்கு நடத்த எனது சகோதரின் உடலை மீட்டு தர, வெளியுறவுத்துறை உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். பிரிட்டனின் சட்ட நடைமுறைகளை எங்களால் தனியாக சந்திக்க மிகவும் கடினமாக உள்ளது. இவ்வாறு ரவிக்குமார் கூறியுள்ளார்.
மேலும் அவர், மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் மற்றும் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோரிடமும் உதவி கோரி உள்ளார். சர்கி தாத்ரி தொகுதி எம்எல்ஏ சுனில் சத்பால் சங்வானும் மத்திய அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிட்டனில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தில் இந்திய மாணவர் விஜய் குமார் ஷியோரனின் மரணம் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.
பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா , ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி ஆகியோர் தலையிட்டு, துக்கத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும். அவரது உடல் தாயகம் கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு எம்எல்ஏ சுனில் சத்பால் சங்வான் தெரிவித்துள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan