ஜோர்டான் பார்டதெல்லா மீது முட்டைத் தாக்குதல் : 74 வயது நபர் கைது!!
30 கார்த்திகை 2025 ஞாயிறு 07:43 | பார்வைகள் : 4332
சனிக்கிழமை 29 நவம்பர் மதியம், ரார்ன்-எ-கரோன் (Tarn-et-Garonne) பகுதியில் நடைபெற்ற தனது புத்தகம் கையொப்பமிடும் நிகழ்வின் போது ரசெம்பிள்மோ நேஷனல் (Rassemblement national) தலைவர் ஜோர்டான் பார்தெல்லா, ஒரு 74 வயது நபரால் தாக்கப்பட்டார்.
அந்த நபர் வரிசையிலிருந்து வெளியே வந்து, பார்தெல்லாவின் தலையில் ஒரு முட்டையை நசுக்கியுள்ளார். பாதுகாப்பு பணியாளர்கள் உடனடியாக தலையிட்டதால் பார்தெல்லா காயமடையவில்லை. தாக்கியவரை சுமார் 20 நிமிடங்களில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட பிறகு தனது கையொப்ப நிகழ்வைத் தொடர்ந்து நடத்தியுள்ளார். சந்தேகநபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார், மேலும் பார்டெல்லா மற்றும் RN கட்சியின் பெயரில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினரின் தகவலின்படி, தாக்குதல் நடத்தியவர் இடதுசாரி செயற்பாட்டாளர்; அவர் அந்த நாளின் முற்பகலில் CGT மற்றும் பிற அமைப்புகள் ஏற்பாடு செய்த பழமைவாத எதிர்ப்பு (antifasciste) போராட்டத்தில் பங்கேற்று இருந்தார். இந்த போராட்டம் பார்தெல்லாவின் வருகைக்கும், நகரம் வழங்கிய மண்டபத்திற்கும் எதிராக இருந்துள்ளது.
இது சமீபத்தில் பார்தெல்லா தாக்குதலுக்குள்ளாகும் இரண்டாவது நிகழ்வு; சில நாட்களுக்கு முன்பு வேசூலில் (Vesoul-Haute-Saône) நடந்த விவசாயத் திருவிழாவில் அவர் மாவினால்(enfariné) தாக்கப்பட்டிருந்தார், அப்போது கூட அவர் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
26 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan