Paristamil Navigation Paristamil advert login

சூரிய கதிர்வீச்சு அபாயம் : ஏர்பஸ் A320 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!!

சூரிய கதிர்வீச்சு அபாயம் : ஏர்பஸ் A320 விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தம்!!

29 கார்த்திகை 2025 சனி 14:11 | பார்வைகள் : 3019


ஏர்பஸ் (Airbus) தனது A320 விமானங்களில் சூரிய கதிர்வீச்சால் பாதிக்கக்கூடிய மென்பொருள் குறைபாடு இருப்பதைக் கண்டறிந்ததைத் தொடர்ந்து, உலகளாவிய அளவில் 6,000 விமானங்களின் சேவையை தற்காலிகமாக நிறுத்துமாறு கேட்டு கொண்டுள்ளது. 

இதையடுத்து ஏர் ஃபிரான்ஸ் உடனடி புதுப்பிப்புகளைத் தொடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை இரவு 35 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, ஆனால் சனிக்கிழமை பயணிகள் அனைவரும் தங்கள் இலக்கை சென்றடைவார்கள், எனினும் சில விமானங்களில் தாமதங்கள் ஏற்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை முதல் சேவை வழக்கத்திற்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் கரீபியன் (des Caraïbes) பகுதிகளுக்கிடையிலான கெயேன் (Guyane), போர்ட்-டே-ஃப்ரான்ஸ் (Fort-de-France -Martinique), பொய்ன்ட்-அ-பித்ரே (Pointe-à-Pitre -Guadeloupe), சான்-டொமிங்கோ (Saint-Domingue-République dominicaine)  மற்றும் போர்ட்-ஓ-பிரின்ஸ் (Port-au-Prince-Haïti) பகுதிகளில் போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்படும். 

நீண்ட பராமரிப்பு தேவையுள்ளதால், சில A320 விமானங்கள் நீண்ட காலத்திற்கு தரையில் நிறுத்தப்படலாம். ஆரம்பத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் பாதிக்கப்படும் என கருதப்பட்டாலும், தற்போது சுமார் நூறு விமானங்களே நீண்ட காலத்திற்குப் பாதிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிலிப் தாபரோட் (Philippe Tabarot) தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்