இலங்கையில் வெள்ள மீட்புப் பணிகள் தீவிரம்: உதவிக்கரம் நீட்டும் இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த்
29 கார்த்திகை 2025 சனி 05:07 | பார்வைகள் : 504
இலங்கையின் வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்த போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டது.
நம் அண்டை நாடான இலங்கையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. இலங்கை முழுதும் ஆறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, குடியிருப்பு பகுதிகளை நோக்கி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
56 பேர் பலி
குறிப்பாக, தேயிலை தோட்ட பகுதிகளான நுவரெலியா, பதுல்லா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. பதுல்லாவில் நிலச்சரிவு ஏற்பட்டு, 16 பேர் உயிருடன் புதைந்தனர். நுவரெலியாவில் நான்கு பேர் இறந்தனர். நாடு முழுதும் 56 பேர் மழைக்கு பலியாகி உள்ளனர். மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
நிலச்சரிவில், 400 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால், 12,300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்காலிக முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. பாறைகள், மரங்கள் விழுந்ததால் தண்டவாளம் சேதமடைந்து, சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
உதவிக்கரம்
இந்நிலையில், வெள்ள மீட்பு நடவடிக்கைகளில் இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பல் ஐஎன்எஸ் விக்ராந்த் ஈடுபட்டுள்ளது. அந்த போர்க்கப்பல்களில் உள்ள ஹெலிகாப்டர்கள் வெள்ளத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் பணியில் ஈடுபட்டது.
அவசரகால சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்களைத் தவிர, மற்ற அனைத்து சேவைகளுக்கும் இன்று இலங்கை அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
உதவ நாங்கள் தயார்!
இலங்கையில் வெள்ள பாதிப்பு குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தித்வா புயல் காரணமாக, தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களும் விரைவில் மீண்டு வர நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இலங்கைக்கு ஆபரேஷன் சாகர் பந்துவின் கீழ், நிவாரண பொருட்களை இந்தியா அவசரமாக அனுப்பி வைத்துள்ளது. மேலும் உதவிகளை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை மற்றும் தொலைநோக்கு பார்வை ஆகியவற்றின் அடிப்படையில், கடினமான நேரத்தில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா துணை நிற்கும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
16 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
25 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan