Noisy-le-Sec : பணியாளர்கள் இருவர் பலி!!
27 கார்த்திகை 2025 வியாழன் 18:29 | பார்வைகள் : 806
பரிசின் புறநகர் பகுதியான Noisy-le-Sec இல் இடம்பெற்ற நச்சுப்பரவலில் இரு பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
இன்று நவம்பர் 27, வியாழக்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Noisy-le-Sec (Seine-Saint-Denis) நகரில் கட்டுமானப்பணியில் ஈடுபட்டிருந்த சிலர் தீடீரென மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி மயங்கி விழுந்தனர். அவர்களி 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்னர். அவர்கள் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். அவர்கள் கார்பன் மொனோக்சைடு விசவாயு தாக்கியுள்ளதாகவும், அதன் காரணமாகவே அவர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் இடம்பெற்றுவதற்கு முந்தைய நாளான நேற்று, குறித்த கட்டுமானப்பணிகள் இடம்பெறும் இடத்தில் மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் ஒன்று பொருத்தியிருந்ததாகவும், அதில் இருந்தே கார்பன் மோனோக்சைடு வாயு வெளியேறி அவர்களை தாக்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan