Paristamil Navigation Paristamil advert login

சீனாவுக்கு அரச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மக்ரோன்!

சீனாவுக்கு அரச சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மக்ரோன்!

27 கார்த்திகை 2025 வியாழன் 15:04 | பார்வைகள் : 345


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சீனாவுக்கான தனது உத்தியோகபூர்வ அரச பயணத்தை மேற்கொள்ள உள்ளார். டிசம்பர் 3 தொடக்கம் 5 வரையான மூன்று நாட்கள் அவர் சீனாவின் பல்வேறு நகரங்களுக்கு பயணிக்க உள்ளார்.

சீனாவின் பீஜிங் நகரில் வைத்து ஜனாதிபதி Xi Jinping இனைச் சந்திக்க உள்ளார். பின்னர் இருவரும் அங்கிருந்து Sichuan மாகாணத்தில் உள்ள Chengdu நகருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ்-சீனா நல்லுறவை பேணும் நோக்கிலும், சில வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திடவும் இந்த பயணம் அமைந்துள்ளதாக எலிசே மாளிகை தெரிவிக்கிறது.

சீன ஜனாதிபதி Xi Jinping கடந்த 2024 ஆம் ஆண்டு மே மாதத்தில் பிரான்சுக்கு வருகை தந்திருந்தார். அதன்பின்னர் தற்போது மக்ரோன் சீனாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்