க்யூபெக் நகரில் மதச்சடங்குகளைத் தவிர்க்க கடுமையான புதிய சட்டங்கள்
27 கார்த்திகை 2025 வியாழன் 06:43 | பார்வைகள் : 209
க்யூபெக் நகரில் பொது இடங்களில் முடிந்தவரை மதச்சடங்குகளைத் தவிர்க்க கடுமையான புதிய சட்டங்கள் அவசியம் என க்யூபெக்கின் மதச்சார்பற்றத்துறை அமைச்சர் ஜீன்-ஃபிரான்சுவா ரோபர்ஜ் தெரிவித்துள்ளார்.
மாகாணத்தில் மதத்தையும் கல்வி அமைப்பையும் முழுமையாகப் பிரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு மதச் சின்னங்கள் தடைச் சட்டமான பில் 21 நிறைவேற்றப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, ரோபர்ஜ் வரும் வியாழக்கிழமை புதிய சட்டத்தை மாகாண சபையில் சமர்ப்பிக்க உள்ளார்.
இதில் மத உடை, பிரார்த்தனை, மற்றும் மத சார்ந்த தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி மீதான கடும் கட்டுப்பாடுகள் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
க்யூபெக் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ரோபர்ஜ், சமீபத்திய பாலஸ்தீன ஆதரவு போராட்டங்களின் போது முஸ்லிம் பிரார்த்தனைகள் தெருக்களில் நடைபெறுதல் சவாலாக உள்ளதாகக் கூறியுள்ளார்.
அதனால், பொது இடங்களில் பிரார்த்தனை தடை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
இந்தத் தடைக்கு சில விதிவிலக்குகள் இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
புதிய சட்டம் குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (daycares) முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் வரை அனைத்து கல்வி நிலைகளிலும் பணிபுரிபவர்களுக்கு மதச் சின்னங்கள் தடை செய்யும்.
தனியார் பள்ளிகளும் இந்தத் தடைக்குள் வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan