அவதானம்! - இறைச்சியில் கலந்த இரும்பு துண்டுகள்!!
26 கார்த்திகை 2025 புதன் 15:11 | பார்வைகள் : 492
பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்படும் இறைச்சிகளில் இரும்பு துகள்கள் கலந்திருக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
சிறிய துண்டுகளாக வெட்டப்பட்டு பொதிசெய்யப்பட்ட இந்த இறைச்சியில், இரும்பு அல்லது அலுமினியம் போன்ற பிசுறுகள் கலந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், இந்த வாரத்தில் U, Leclerc, Auchan மற்றும் Intermarché ஆகிய பல்பொருள் அங்காடியில் விற்பனை செய்யப்பட்ட பொதி இலக்கம்
3265980147245
3265980126707
3265980122167.
ஆகிய மூன்று GTIN இலக்கங்கள் கொண்ட பொதிகளை நீங்கள் வாங்கியிருந்தால், அதனை பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மனிதர்களால் வெட்டப்பட்டு, பொதிசெய்யப்படும் இந்த இறைச்சி துண்டுகளில் இந்த தவறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இறைச்சிகளை மீள கொடுத்து பணத்தினை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan