Paristamil Navigation Paristamil advert login

HIV - 5,100 பேருக்கு அடையாளம் காணப்பட்டது!!

HIV - 5,100 பேருக்கு அடையாளம் காணப்பட்டது!!

26 கார்த்திகை 2025 புதன் 07:22 | பார்வைகள் : 190


2024 ஆம் ஆண்டில் மட்டும் பிரான்சில் 5,100 பேருக்கு எச்.ஐ.வி அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரெஞ்சு சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இவர்களில் 18 தொடக்கம் 21 வயதுக்குட்பட்ட ஆண்களே அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. MSM எனப்படும் ஆண்களுக்கிடையிலான உடல்ரீதியான பாலியல் செயற்பாடுகளின் மூலம் அதிகளவாக இந்த வைரஸ் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தைய 2023 ஆம் ஆண்டிலும் கிட்டத்தட்ட இதே அளவான எண்ணிக்கையிலேயே தொற்று அடையாளம் காணப்பட்டிருந்தது.  இந்த எண்ணிக்கை குறைவடையாமல் தொடர்வது பெரும் கவலையை அளிப்பதாகவும், இளைஞர்களிடம் கலவியின் போதான பாதுகாப்பு தொடர்பில் போதிய தெளிவின்மை காரணமாக  இந்த தொற்று பரவி வருவதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்