சம்மதத்துடன் சேர்ந்து வாழ்ந்த பின் பிரிந்தால் ஆண் மீது பாலியல் வழக்கு போட முடியாது: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
26 கார்த்திகை 2025 புதன் 07:19 | பார்வைகள் : 696
முழு சம்மதத்துடன் ஒரு ஆணுடன் சேர்ந்து வாழ்ந்து, க ருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த பின், அந்த ஆண் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுப்பதை ஏற்க முடியாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த சமாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவின் விபரம்:
நானும், ஒரு பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் பரஸ்பர முழு சம்மதத்துடன் மூன்றாண்டுகள் சேர்ந்து வாழ்ந்தோம்.
வன்கொடுமை பின், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த பெண் பிரிந்து சென்றார். பிரிவுக்கு பின், அந்த பெண் என் மீது பாலியல் வன்கொடுமை புகார் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து நான் ஏமாற்றியதாக பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளார்.
இந்த வழக்கில் முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுத்ததுடன், வழக்கை சந்தித்தே தீரவேண்டும் என உத்தர விட்டுள்ளது. எனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்து, நியாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஒரு ஆணு ம், பெண்ணும் பரஸ்பர உறவில் இருந்துவிட்டு, பிரிந்த பின் ஆண் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட வயதை கடந்தவர்களுக்கு இடையே, முழு சம்மதத்துடன் உறவு கொள்வதற்கு சட்டம் அனுமதி வழங்குகிறது.
அதை பயன்படுத்திவிட்டு, பின் கருத்து வேறுபாடு ஏற்பட்டவுடன் ஆண் மீது கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்துவதை பாலியல் வன்கொடுமை வழக்காக பதிவு செய்ய முடியாது.
கவலைக்குரியது திருமண வாக்குறுதி நிறைவேறவில்லை என்பதற்காக பரஸ்பர சம்மதத்துடன் வைத்திருந்த பாலியல் உறவுகளை குற்றமாக்க முடியாது.
மேலும் இந்த வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட நபர் புகார்தாரரை பாலியல் உறவுக்காக பயன் படுத்தவில்லை. மாறாக இந்த உறவு பரஸ்பர சம்மதத்துடன் மூன்று ஆண்டுகள் தொடர்ந்துள்ளது.
குற்றவியல் நீதி நடைமுறையை இவ்வாறு தவறாக பயன்படுத்துவது கவலைக்குரிய விஷயம்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan