Val-d'Oise : காவல்துறையினரிடம் இருந்து தப்பி ஓடிய இருவர் விபத்தில் பலி!!
25 கார்த்திகை 2025 செவ்வாய் 19:15 | பார்வைகள் : 485
காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி தப்பி ஓடிய இருவர், கனரக வாகனம் ஒன்றுடன் மோதி சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
Val-d'Oise மாவட்டத்தில் இச்சம்பவம் நவம்பர் 24, நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. Pierrelaye நகர் பகுதி அருகே A15 நெடுஞ்சாலையில் வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், மின் விளக்கு அணைக்கப்பட்ட மகிழுந்து வேகமாக பயணிப்பதை பார்த்து, சந்தேகம் கொண்டு அதனை நிறுத்தும்படி சமிக்ஞை வெளியிட்டனர்.
ஆனால், மகிழுந்து நிற்காமல் தொடர்ந்து பயணித்ததோடு, மேலும் வேகமாகவும் பயணித்தது. காவல்துறையினர் பின்னால் துரத்திச் சென்றனர். என்றபோதும் அவர்கள் காவல்துறையினரின் கண்களுக்குள் சிக்காமல் மாயமாகியிருந்தனர்.
ஆனால் சிறிது நேரத்தில் 17 எனும் அவசர இலக்கத்துக்கு பெறப்பட்ட தகவலின் படி, குறித்த மகிழுந்தில் பயணித்த இருவரும் கனரக வாகனம் ஒன்றுடன் மோதுண்டு பலியானதாக தெரியவந்தது.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan