Paristamil Navigation Paristamil advert login

கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை கட்டுப்படுத்தும் சுவிஸ் மக்கள்

கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை கட்டுப்படுத்தும் சுவிஸ் மக்கள்

25 கார்த்திகை 2025 செவ்வாய் 11:51 | பார்வைகள் : 174


கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை இந்த ஆண்டும் கட்டுப்பாட்டில் வைக்க சுவிஸ் மக்கள் முடிவு செய்துள்ளதாக சமீபத்திய ஆய்வொன்று தெரிவிக்கிறது.

ஆய்வமைப்பான EY மற்றும் சுவிஸ் சில்லறை வர்த்தக் கூட்டமைப்பு ஆகியவை சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வொன்றில், கடந்த ஆண்டைப்போலவே, இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் பண்டிகை செலவை கட்டுப்பாட்டில் வைக்க சுவிஸ் மக்கள் முடிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு, சராசரியாக நுகர்வோர் ஒருவர் கிறிஸ்துமஸ் காலகட்டத்தில் 282 சுவிஸ் ஃப்ராங்குகள் செலவு செய்த நிலையில், இந்த ஆண்டும் அதே தொகையையே செலவு செய்ய சுவிஸ் மக்கள் முடிவு செய்துள்ளார்கள்.

மக்கள் மிக அதிக அளவில் செலவு செய்த 2022ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, இது 20 சதவிகிதம் குறைவாகும்.

விலைவாசி உயர்வு, மருத்துவக் காப்பீடு மற்றும் வாடகைக்கு அதிக செலவு செய்யவேண்டி இருப்பதாலேயே, கிறிஸ்துமஸ் செலவுகளைக் குறைக்க முடிவு செய்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்