Paristamil Navigation Paristamil advert login

கனடா மற்றும் அமெரிக்காவில் நிலவிவரும் குளிர் காலநிலை

 கனடா மற்றும் அமெரிக்காவில் நிலவிவரும் குளிர் காலநிலை

25 கார்த்திகை 2025 செவ்வாய் 10:57 | பார்வைகள் : 189


கனடா மற்றும் அமெரிக்காவில் தாக்கிய கடுமையான குளிர் காலநிலைக்கு துருவ சுழல் இயக்கவியலே கரணம் என கூறப்படுகிறது.

இந்த வானிலை நிகழ்வு முதன்முதலில் 2014 ஆம் ஆண்டில் பிரபலமடைந்தது, அப்போதிருந்து வெப்பநிலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

மேற்கு மற்றும் மத்திய கனடாவில் வரவிருக்கும் வாரங்களில் மீண்டும் கடுமையான குளிர் நிலவும் என்று முன்னறிவிப்பாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் கிழக்குப் பகுதிகளுக்கும் இது நகரக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. துருவ சுழல் என்பது எப்போதும் வளிமண்டலத்தின் மேல் அடுக்கில் (ஸ்ட்ராடோஸ்பியரில்) இருக்கும், அது நிலையாக இருக்கும்போது வடக்கிலேயே இருக்கும்.

இருப்பினும், சில சமயங்களில் அது நிலையற்றதாகி தெற்கு நோக்கி நகர்ந்து, ஜெட் ஸ்ட்ரீமுடன் இணைந்து அசாதாரணமான குளிரைக் கொண்டுவருகிறது என்று மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (MIT) காலநிலை ஆய்வாளர் ஜூடா கோஹன் விளக்குகிறார்.

அதேவேளை ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை துருவ சுழலில் இடையூறு ஏற்படுகிறது, இதனால் சில நாட்களிலேயே கணிசமான வெப்பநிலை உயர்வு அல்லது காற்று அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது என சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றக் கனடாவைச் சேர்ந்த மைக்கேல் சிக்மண்ட் கூறுகிறார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்