லிஸ்டீரியா அபாயம்: U ராக்லெட் சீஸ் மீளப்பெறப்படுகிறது !!
29 மார்கழி 2025 திங்கள் 16:06 | பார்வைகள் : 714
லிஸ்டீரியா தொற்று அபாயம் காரணமாக U பிராண்டின் ராக்லெட் சீஸ் ஒரு தொகுதி பிரான்ஸ் முழுவதும் திரும்பப்பெறப்படுகிறது.
இந்த சீஸ் U கடைகளில் 300 கிராம் பொதிகளாக விற்பனை செய்யப்படுகிறது. மூன்று மிளகாய் சேர்க்கப்பட்ட இந்த சீஸ்களில் Listeria monocytogenes என்ற பக்டீரியா இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பொதிகளின் பயன்பாட்டு கடைசி தேதி ஜனவரி 13, மற்றும் தொகுதி எண் 156 என்று தொடங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்த சீஸ்களை கடைக்கு திருப்பி அளித்து ஜனவரி 13 வரை பணத்தை மீளப் பெறலாம்.
லிஸ்டீரியா பக்டீரியா லிஸ்டீரியோசிஸ் என்ற கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும். இந்த சீஸ்களை உண்டு காய்ச்சல், தலைவலி அல்லது உடல் வலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும், ஏனெனில் சில நேரங்களில் நரம்பியல் சிக்கல்கள் மற்றும் தாய்–கரு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். இந்த நோயின் உட்புகும் காலம் எட்டு வாரங்கள் வரை இருக்கக்கூடும்.
இந்த U மார்க் ராக்லெட் சீஸ் திரும்பப்பெறல் தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு 09.69.36.69.36 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan