Paristamil Navigation Paristamil advert login

சென் நதிக்குள் கவிழ்ந்த மகிழுந்து! - இருவர் பலி!

சென் நதிக்குள் கவிழ்ந்த மகிழுந்து! - இருவர் பலி!

22 மார்கழி 2025 திங்கள் 14:12 | பார்வைகள் : 877


மகிழுந்து சென் நதிக்குள் கவிழ்ந்ததில் 27 மற்றும் 28 வயதுடைய இருவர் பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமை நண்பகல் இச்சம்பவம் Puteaux (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. Allée de l'Écluse பகுதியில் சென் நதிக்கரையருகே உள்ள வாகன தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மகிழுந்து திடீரென உருண்டு விழுந்து சென் நதிக்குள் கவிழ்ந்து விழுந்துள்ளது.

மகிழுந்துக்குள் இருந்த 28 மற்றும் 27 வயதுடைய ஆண் பெண் இருவரும் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

மீட்புப்பணியினர் இருவரது சடலங்களையும் மீட்டு, மகிழுந்தையும் மீட்டனர். விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்