சிக்கலில் பட்ஜெட்! - அவசரமாக நிறைவேற்றப்பட உள்ள 'சிறப்புச் சட்டமூலம்!'
22 மார்கழி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 103
வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், அரசாங்கம் ஒரு 'சிறப்புச் சட்டமூலம்' ஒன்றை உருவாக்க உள்ளது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் (பட்ஜெட்) நிறைவேற்ற மிக மிக குறுகிய காலமே இருப்பதால், அரசு பலத்த நெருக்கடியை சந்தித்துள்ளது. இந்நிலையில், நாட்டை கொண்டுநடத்த ஒரு தற்காலிக சிறப்பு சட்டமூலத்தை பயன்படுத்தி நிதி ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
'அரசாங்கத்தை கவிழ விடாமல் தாங்கிப்பிடிக்க அவ்வாறான ஒரு சட்டமூலம் தேவை' என பொது கணக்கிற்கான அமைச்சர் Amélie de Montchalin நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை தெரிவித்தார்.
'வரவுசெலவுத்திட்டத்தை ஜனவரிக்கு பிற்போட முடிவதற்கு, எங்களுக்கு குறைந்தபட்சம் அரசாங்கத்தை கொண்டுநடத்த பணம் தேவை. அதனை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை உள்ளது' என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சிறப்பு சட்டமூலம் குறித்து இன்று திங்கட்கிழமையும் நாளை செவ்வாய்க்கிழமையும் அமைச்சரவையில் ஆராயப்படும்.
அதேவேளை, இது தொடர்பில் பிரதமர் Sébastien Lecornu எந்த தகவலையும் முறையாக அறிவிக்கவில்லை. மாறாக "திங்கட்கிழமை முதல், பிரெஞ்சு மக்களைப் பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தீர்வுக்கான நிலைமைகளைக் கண்டறிவது குறித்தும் முக்கிய அரசியல் தலைவர்களை நான் கூட்டுவேன்." என தெரிவித்தார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan