புதிய விமானம் தாங்கி கப்பல்: பிரான்ஸின் இராணுவ சக்திக்கான மக்ரோனின் ஒப்புதல்!!!
21 மார்கழி 2025 ஞாயிறு 20:39 | பார்வைகள் : 934
இம்மானுவேல் மக்ரோன், அபூதாபியில் உள்ள பிரெஞ்சு இராணுவத் தளத்தில் இருந்து, சார்ல்-து-கோல் விமான தாங்கி கப்பலை அடுத்ததாக புதிய விமான தாங்கி கப்பல் கட்டுவதற்கு இன்று ஒப்புதல் வழங்கி உள்ளார்.
2038 ஆம் ஆண்டில் சேவையில் சேரவுள்ள இந்த கப்பல், பிரான்ஸின் தேசிய சக்தியை பிரதிபலிக்கும் முக்கியச் சின்னமாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டம் இராணுவ திட்டமிடல் சட்டங்களுக்கு ஏற்ப, முழுமையான ஆய்வுக்குப் பிறகு இந்த மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கும் முடிவு இந்த வாரம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய விமான தாங்கி கப்பல் திட்டம் 2023 ஏப்ரலில் வெளியிடப்பட்டது. அப்போது ஆயுதப்படைகள் அமைச்சர் இருந்த செபாஸ்டியன் லெகோர்னு, இதனை « மிதக்கும் ஒரு மிருகம் » என்றும் « தொழில்நுட்பத்தின் ஒரு பேராலயம் » என்றும் விவரித்தார். 2001 ஆம் ஆண்டு முதல் சேவையில் உள்ள, சுமார் 40 ஆண்டுகள் பயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட சார்ல்-து-கோல் கப்பலை விட 2038க்குள் இது ஒரு புதிய சக்தியாக மாறும்.
அணு சக்தியில் இயங்கும் இந்த புதிய விமானம் தாங்கி கப்பல், தற்போதைய கப்பலை விட மிகவும் பெரியதாக இருக்கும். சுமார் 80,000 டன் எடையுடன் 310 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், 2,000 கடற்படையினரையும் 30 போர் விமானங்களையும் ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது. இந்த திட்டம் பிரான்ஸின் பாதுகாப்பு திறனை வலுப்படுத்துவதோடு, பொருளாதாரத்திற்கும் பலனளிக்கும் என ஜனாதிபதி மக்ரோன் தெரவித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan