உலக அளவிலான அணு ஆயுத தடைகளுக்கு ஆதரவு வழங்கும் சுவிஸ் நாடு
21 மார்கழி 2025 ஞாயிறு 18:36 | பார்வைகள் : 257
உலக அளவிலான அணு ஆயுத தடைகளுக்கு சுவிஸ் நாட்டு மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக அளவில் அனைத்து நாடுகளிலும் அணு ஆயுத பயன்பாடு மற்றும் தடை விதிப்பதற்கு சுவிட்சர்லாந்து மக்கள் பெரும் ஆதரவு தெரிவித்து இருப்பது சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அணுஆயுதங்கள் இல்லாத அமைதியான உலகத்தை படைக்க வேண்டும் என்று சமூக பாகுபாடுகள் தாண்டி பெரும்பாலான சுவிட்சர்லாந்து நாட்டு மக்கள் விரும்புவது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாலினம், வயது, கல்வித் தகுதி, கிராமப்புற அல்லது நகர்ப்புற மக்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய எந்தவொரு காரணிகளும் அணு ஆயுதங்களுக்கு எதிரான இந்த கருத்தில் மிகப்பெரிய மாற்றத்தை தெரிவிக்கவில்லை.
சுமார் 1,007 பேர் கலந்து கொண்ட இந்த ஆய்வை, அணு ஆயுத ஒழிப்பிற்கான சர்வதேச பிரச்சார அமைப்பு (ICAN) சார்பில் டெமோஸ்கோப்(demoscope) என்ற நிறுவனம் நடத்தியது.
இந்த ஆய்வின் முக்கிய நோக்கமாக 2021ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் உருவாக்கிய அணு ஆயுதத் தடை ஒப்பந்தம்(TPNW) மற்றும் உலகில் அணு ஆயுதங்களை ஒட்டுமொத்தமாக அழிப்பது குறித்த சுவிட்சர்லாந்து மக்களின் எண்ணத்தை அறிவதாகும்.
ஐ.நா.வின் இந்த அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தில் இதுவரை 100 நாடுகள் இணைந்துள்ளன.
இதில் 74 நாடுகள் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளன.
இருப்பினும், அணு ஆயுதம் வைத்துள்ள மற்றும் நேட்டோ அமைப்பில் உள்ள சில நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan