லா பாங்க் போஸ்ரல் இணையதளம் மற்றும் மொபைல் செயலி செயலிழப்பு!!
20 மார்கழி 2025 சனி 21:08 | பார்வைகள் : 1778
லா பாங்க் போஸ்ரல் வங்கியின் இணையதளம் மற்றும் மொபைல் பயன்பாடு தற்போது தொழில்நுட்பக் கோளாறால் செயல்படவில்லை.
இந்த சம்பவம் கிறிஸ்துமஸ் வாரம் நெருங்கும் இறுதியில் ஏற்பட்டுள்ளது. வங்கி தனது வாடிக்கையாளர்கள் தற்காலிகமாக ஆன்லைன் வங்கி சேவைகளை அணுக முடியாத நிலையில் இருப்பதாகவும், இந்த பிரச்சினையை விரைவில் சரிசெய்ய தனது குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எஸ்எம்எஸ் (SMS) மூலம் அங்கீகாரம் செய்து ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் இன்னும் செய்ய முடிகிறது. அதேபோல், கடைகளில் டெபிட்/கிரெடிட் கார்டு (carte bleue) மூலம் பணம் செலுத்துவதும், Wero உடனடி வங்கி பரிமாற்றங்களும் தொடர்ந்து செயல்படுகின்றன.
மேலும் பார்சல் கண்காணிப்பு தளமான கொலிசிமோ (Colissimo) கூட “அணுக முடியாத நிலையில்” உள்ளது. அதேபோல், தபால் துறையின் டிஜிட்டல் சேமிப்புக் கூடு (coffre-fort numérique) ஆன டிஜிபோஸ்ட் (Digiposte) சேவையும் தற்போது அணுக முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan