அணுமின் நிலையத்தில் தீ! - பெரும் சேதம் தவிர்ப்பு!!
20 மார்கழி 2025 சனி 17:39 | பார்வைகள் : 754
அணுமின் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட பாரிய தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிக விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
Ardennes நகரில் உள்ள centrale nucléaire de Chooz அணுமின் நிலையத்தில் இன்று டிசம்பர் 20, அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென தீ பரவியது. அணுமின் நிலையத்தின் முதலாம் இலக்க பிரிவில் தீ பரவியது. உடனடியாக செயற்பட்ட ஊழியர்கள் தீயை அணைத்தனர்.
அவசர சமிக்ஞை ஒலி எழுப்பட்டு அப்பகுதி முழுவதும் எச்சரிக்கப்பட்டது. ஆனால் தீ அணைக்கப்பட்டதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டதாக பிரெஞ்சு மின்சார வாரியம் தெரிவித்தது.
அதேவேளை, மின் உற்பத்தியை இச்சம்பவம் எவ்விதத்திலும் பாதிக்கவில்லை எனவும், முதலாம் பிரிவு நிலையம் மட்டும் மூடப்பட்டதாகவும், இரண்டாம் பிரிவு நிலையத்தில் மின் உற்பத்தி தடையின்றி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan