Paristamil Navigation Paristamil advert login

உக்ரைன் தோல்வியடைந்தால் ரஷ்யா போலந்தை குறிவைக்கும் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

உக்ரைன் தோல்வியடைந்தால் ரஷ்யா போலந்தை குறிவைக்கும் - ஜெலென்ஸ்கி எச்சரிக்கை

20 மார்கழி 2025 சனி 15:24 | பார்வைகள் : 217


உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்யாவின் படையெடுப்பு நிறுத்தப்படாவிட்டால் அடுத்த இலக்கு போலந்து ஆகும் என எச்சரித்துள்ளார்.

உக்ரைனுக்கு சுதந்திரம் இல்லாமல் போனால் ரஷ்யாவின் கவனம் போலந்தை நோக்கி திரும்பும், அதனால், உக்ரைனும் போலந்தும் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜெலென்ஸ்கி, போலந்து ஜனாதிபதி கரோல் நாவ்ரோக்கியுடன் கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.

போலந்து, தற்போதைய பிரதமர் டொனால்ட் டஸ்க் தலைமையில் உக்ரைனுக்கு வலுவான ஆதரவாளராக உள்ளது.

ஆனால், 2027-இல் தேசியவாதக் கட்சியான Law and Justice மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதால், எதிர்கால உறவுகள் சவாலாக இருக்கலாம்.

நாவ்ரோக்கி, Law and Justice கட்சியின் ஆதரவுடன் வெற்றி பெற்றவர் என்பதால், உக்ரைனுடன் உறவில் எச்சரிக்கையாக நடந்து வருகிறார்.

போலந்துக்கு ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ளும் அனுபவம் மற்றும் பால்டிக் கடல் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகளை வழங்கிவருவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், போலந்து நிறுவனங்களை உக்ரைன் மறுசீரமைப்பில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், போலந்து ஜனாதிபதியை உக்ரைன் தலனார் கீவிற்கு அழைத்து, இரு நாடுகளின் உறவை வலுப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஜெலென்ஸ்கியின் இந்த எச்சரிக்கை, ரஷ்யா-உக்ரைன் போரின் தாக்கம் ஐரோப்பிய பாதுகாப்பு சூழ்நிலைக்கு விரிவடையக்கூடும் என்பதை வெளிப்படுத்துகிறது.

உக்ரைன் மற்றும் போலந்து இடையேயான ஒற்றுமை மற்றும் கூட்டாண்மை, ரஷ்யாவின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தடுக்க முக்கிய பங்காற்றுகின்றது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்