மக்ரோன் தம்பதியினரின் வீட்டுக்கு முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!
19 மார்கழி 2025 வெள்ளி 13:00 | பார்வைகள் : 1613
Touquet நகரில் உள்ள ஜனாதிபதி தம்பதியினரின் வீட்டுக்கு முன்பாக விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்தவாரத்தில் இருந்து விவசாயிகள் தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறமை அறிந்ததே. வீதிகளை முடக்கியும், பல நகரசபை கட்டிடங்கள் மற்றும் அரச அலுவலகங்களை முடக்கியும் அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக இன்று டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணி அளவில் FNSEA மற்றும் Jeunes agriculteurs (JA) ஆகிய இரு அமைப்பைச் சேர்ந்த ஐம்பது வரையான விவசாயிகள் ஜனாதிபதி தம்பதியினரின் வீட்டுக்கு முன்பாக கூடி, அங்கு பல உழவு இயந்திரங்களை நிறுத்தியும், விவசாயக் கழிவுகளைக் கொட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி அவர்களை கலைந்துபோகச் செய்தனர். காலை 8 மணி வரை இந்த இழுபறி நீடித்தது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் மெர்கோசூர் நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதை அடுத்தே விவசாயிகள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan