Paristamil Navigation Paristamil advert login

EuroMillions : 178 மில்லியன் யூரோக்கள் வென்ற தம்பதியினர்!!

EuroMillions : 178 மில்லியன் யூரோக்கள் வென்ற தம்பதியினர்!!

17 மார்கழி 2025 புதன் 17:14 | பார்வைகள் : 1155


யூரோமில்லியன் அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து நான்காவது மிகப்பெரிய தொகை தற்போது வெல்லப்பட்ட்டுள்ளது.

நவம்பர் 28 ஆம் திகதி அன்று சீட்டிழுக்கப்பட்டதில், 5-29-33-39-42 எனும் ஐந்து இலக்கங்களையும், 3 மற்றும் 9 ஆகிய நட்சத்திர இலக்கங்களையும் சரியாக கணித்த தம்பதியினர் இருவர், மொத்தமாக 178, 656, 733  யூரோக்கள் தொகையை வென்றுள்ளனர்.

Alsace (Haut-Rhin) நகரில் வசிக்கும் இரு தம்பதியினர் இந்த தொகையை வென்றுள்ளனர். “நாங்கள் செல்வந்தர்களாகிவிட்டோம்!” என மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

யூரோமில்லியன் அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை விபரம்,

250,000,000 - France - 19, aout - 2025 
250,000,000 - Irlande -17, juin - 2025
250,000,000 - Autriche - 28, mars - 2025
240,000,000 - Autriche - 8, decembre - 2023
230,000,000 - Royaume -Uni - 19, juillet - 2022
220,000,000 - France - 15, octobre - 2021

வர்த்தக‌ விளம்பரங்கள்