விவசாயி தற்கொலை! - உச்சக்கட்ட கோபத்தில் வீதிகளில் இறங்கி போராட்டம்!!
17 மார்கழி 2025 புதன் 12:17 | பார்வைகள் : 536
திங்கட்கிழமை இரவு விவசாயி ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை, விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர்களது ஆர்ப்பாட்டம் மேலும் உக்கிரமடைந்துள்ளது.
Gers (Auch) நகரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தற்கொலை செய்துகொண்டார். அதை அடுத்து நேற்று டிசம்பர் 16, மாலை மாவட்ட காவல்நிலையம் முன்பாக உழவு இயந்திரங்களில் படையெடுத்து வந்த விவசாயிகள் பலர், காவல்நிலையத்தை முடக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயக்கழிவுகளை வெட்டி அள்ளிவந்து கட்டிடத்தின் முற்றத்தில் கொட்டினர்.
கிட்டத்தட்ட இரண்டுமணிநேர ஆர்ப்பாட்டடத்தின் பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
நாள் ஒன்றுக்கு 2.8 விவசாயிகள் தற்கொலை செய்வதாக தேசிய விவசாய சமூக அவசரகால சேவையின் அதிகாரி ( président du Samu Social Agricole National) Michel Bini தெரிவித்தார்.
விவசாயிகள் கடந்தவாரத்தில் இருந்து பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan