பரிஸ் : வீடற்றவர் ஒருவருக்கு கத்திக்குத்து தாக்குதல்!!
15 மார்கழி 2025 திங்கள் 14:51 | பார்வைகள் : 1774
டிசம்பர் 14, நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை பரிசில் வீடற்றவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.
12 ஆம் வட்டாரத்தின் place de la Nation நிலையம் அருகே இச்சம்பவம் மாலை 7 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. SDF எனப்படும் வீடற்றவர் இருவர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாகவும், காவல்துறையினர் அழைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வருகை தரும் முன்னர், வீடற்றவர்களில் ஒருவர் மற்றையவரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
பின்னர் ஒருமணிநேரம் கழித்து அவர் 20 ஆம் வட்டாரத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். 43 வயதுடைய குறித்த நபர் மீது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan