2026ஆம் ஆண்டு SMIC உயர்வு : ஏற்றம் குறைவாகவே உள்ளது என தொழில் சங்கங்கள் விமர்சனம்!!!
12 மார்கழி 2025 வெள்ளி 22:33 | பார்வைகள் : 450
குறைந்தபட்ச ஊதியமான SMIC, 2026 ஜனவரி 1 முதல் 1,18% உயர்த்தப்பட்டு மாதத்திற்கு 1 823 யூரோக்களும், ஒரு மணி நேரத்திற்கு 12,02 யூரோவாகவும் உயர்கிறது. இது வருடாந்த இயல்பான உயர்வு மட்டுமே; அரசின் “கூடுதல் உயர்வு” எதுவும் இல்லை. இதனால் முழுநேரமாக வேலை செய்கிற ஒரு தொழிலாளிக்கு மாதம் சுமார் 17 யூரோவிற்கும் குறைவாகவே அதிகரிப்பு கிடைக்கும்.
வாங்கும் திறன் குறைந்துவரும் நேரத்தில் இந்த முடிவு தொழிற்சங்கங்களில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. CFDT, CGT, CFTC உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் இந்த உயர்வை போதாமை எனக் கண்டித்துள்ளன.
CGT, 2 000 யூரோக்கள் SMIC ஆகவும் மற்றும் சம்பளங்கள் விலை உயர்வுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்றும் கோருகிறது. CFTC 5% உயர்வு பொருளாதார ரீதியாக கூட சாத்தியம் என ஆய்வு செய்ததாக கூறுகிறது. தற்போது தனியார் துறையில் 22 லட்சம் தொழிலாளர்கள் SMICயில் சம்பளம் பெறுகின்றனர், இது மொத்த தொகையின் 12,4% மட்டுமே ஆகும்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan