தான்சானியாவில் ஜனாதிபதித் தேர்தல் வெற்றி - மீண்டும் பதவிக்கு வரும் பெண் ஜனாதிபதி
2 கார்த்திகை 2025 ஞாயிறு 07:26 | பார்வைகள் : 332
தான்சானியா அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் சமியா, 97 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் நடந்த அதிபர் தேர்தலில், ஆளும் கட்சியான சி.சி.எம்., எனப்படும், சமா சா மாபிந்துசி கட்சி சார்பில் போட்டியிட்ட அதிபர் சமியா சுலுஹு ஹசன், 97.66 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், முக்கிய எதிர்கட்சிகளான சாடேமா மற்றும் வஸலெண்டோ ஆகியவை தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தேர்தல் முடிவுகளை நிராகரித்துள்ளன.
கடந்த அக்டோபர் 29ம் திகதி நடந்த அதிபர் தேர்தலில் பிரதான எதிர்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போட்டியிடுவது தடுக்கப்பட்டது.
குறிப்பாக, சாடேமா கட்சியின் தலைவர் துண்டு லிசு மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இதனால், அவர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்தார்.


























Bons Plans
Annuaire
Scan