முதல் பெண்மணி மீது அவதூறு! - 10 பேருக்கு சிறை!!
26 ஐப்பசி 2025 ஞாயிறு 17:26 | பார்வைகள் : 943
முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன் மீது அவதூறு கருத்துக்களை பரப்பிய 10 பேர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
பிரிஜித் மக்ரோன் பிறக்கும் போது ஆணாக இருந்தவர் எனவும், பின்னர் அவர் பெண்ணாக மாறினார் எனவும் அவர் மீது பலர் விமர்சனங்கள் முன்வைத்து வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுக்களை அவதூறு என தெரிவித்து, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் பிரிஜித் வழக்கு பதிவு செய்து, ஆதாரங்கள் புகைப்படங்களை சமர்ப்பித்திருந்தார்.
அமெரிக்காவைச் சேர்ந்த சமூகவலைத்தள பிரபலம் ஒருவர் தொடர்ச்சியாக அவதூறு பரப்பி வருவதால் அமெரிக்காவில் இந்த வழக்கினை பிரிஜித் மக்ரோன் தொடுத்திருந்தார்.
அதை அடுத்து ஆசியர், மருத்துவர், தொழிலதிபர் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 பேர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan