Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பெண் உடல் அதிசயங்ககள்......

பெண் உடல் அதிசயங்ககள்......

10 ஆடி 2020 வெள்ளி 12:21 | பார்வைகள் : 13314


 நமது ஆயுட்காலத்தில் சராசரியாக 30 ஆயிரம் கிலோ எடைகொண்ட உணவினை உட்கொள்கிறோம். இதயம் ஒரு வருடத்துக்கு 43 லட்சம் தடவை துடிக்கிறது. உடலுக்குள் ரத்தம் தினமும் பலகோடி மைல் தூர அளவுக்கு சஞ்சரித்துக்கொண்டே இருக்கிறது.

 
இந்த ரத்தம்- உடலின் ‘போக்குவரத்து சிஸ்டமாகவும்’, நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையாகவும் இருக்கிறது. செல்களுக்கு தேவையான ஆக்சிஜன், தண்ணீர், உணவு போன்றவைகளை ரத்தம்தான் கொண்டு போய் சேர்க்கிறது. அது மட்டுமின்றி செல்களின் பல்வேறு செயல்பாடுகளால் உருவாகும் கழிவுகள், அதற்குரிய இடங்களில் போய் சேரவும் ரத்தம்தான் துணைபுரிகிறது. அதற்காக ரத்தம் தினமும் உடலுக்குள் பல கோடி மைல் தூரம் பயணப்பட வேண்டியிருக்கிறது.
 
 
ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் இருக்கும் ஹீமோகுளோபினின் பங்களிப்பு மிக முக்கியமானது. இதுதான், ஆக்சிஜனை சுவாச கட்டமைப்புகளில் இருந்து பெற்று, செல்களில் கொண்டுபோய் சேர்க்கிறது. அங்கிருந்து கார்பன் டை ஆக்சைடை மீண்டும் சுவாச கட்டமைப்புகளுக்கு கொண்டு சேர்த்து, உடல் இயக்க நிலையை சீராக்குகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான வெள்ளை ரத்த அணுக்கள், ரத்தம் கெட்டியாக துணைபுரியும் பிளாஸ்மா போன்றவைகளும் ரத்தத்தில்தான் இருக்கின்றன.
 
இதயம் ஒரு பம்ப். இது கிட்டத்தட்ட நிமிடத்திற்கு 80 முறை துடிக்கிறது. ஒரு நிமிடம் அது துடிக்காமல் இருந்தாலே ஆயுள் முடிந்துவிடும். இதயம் துடிக்கும்போது பிராணவாயுவும், சத்தும் அடங்கிய சுத்த ரத்தத்தை செல்களுக்கு கொண்டு சேர்ப்பதும், அங்கிருந்து கழிவுகள் அடங்கிய அசுத்த ரத்தத்தை சுவாச கட்டமைப்புக்கு கொண்டு வருவதும் நடக்கிறது.
 
இனப்பெருக்க உறுப்புகளின் செயல்பாட்டிலும் அதிசயங்கள் நிறைந்திருக்கின்றன. தொடர்ச்சியாக மனித இனம் உருவாகிக்கொண்டே இருக்க இனப்பெருக்க உறுப்புகள்தான் காரணம். ஆண் இனப்பெருக்க உறுப்பிற்கும், பெண் இனப்பெருக்க உறுப்பிற்கும் வித்தியா சங்கள் இருந்தாலும், இரண்டும் இணைந்து உருவாக்கம் நிகழ்த்தும் விதத்தில் அவை அற்புதமாக படைக்கப்பட்டிருக் கின்றன. ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரான், ஆணின் விரைகளில் செயல்பட்டு உயிரணுவை உற்பத்தி செய்கிறது. ஒரு மில்லி விந்துவில் ஒன்றரை கோடி உயிரணுக்கள் இருக்கும். பெண்ணை கருத்தரிக்க வைக்க அதில் ஒன்றே ஒன்று போதுமானது.
 
பெண்களின் இனப்பெருக்க உறுப்புகள்தான், மனித உற்பத்திக் கேந்திரம். பெண்ணுறுப்பு, கருப்பை, சினைப்பைகள், கருக்குழாய்கள் போன்றவைகள் அதில் குறிப்பிடத்தக்கவை. பெண்ணுறுப்பு கிட்டத்தட்ட பத்து செ.மீ. நீளம் கொண்ட ஒரு குழல்போன்ற அமைப்பு. அதன் முகப்பு பகுதி கன்னிச்சவ்வு மூலம் மூடப்பட்டிருக்கும். அதன் நடுவில் உள்ள சிறிய துவாரத்தின் வழியாகத்தான் மாதவிலக்கு உதிரம் வெளியேறுகிறது. உறவின்போது ஆணின் உயிரணுவை, யோனி நாளம் வரவேற்கிறது. பெண்ணுறுப்புக்கு பார்தோலின் என்ற சுரப்பி சுரக்கும் திரவம் வழுவழுப்புத்தன்மையை உருவாக்குகிறது. இவை அனைத்தும் உடலியல் விஞ்ஞான தகவல்கள் ஆகும்.
 
எட்டு செ.மீ. நீளமும், ஐந்து செ.மீ. அகலமும் கொண்ட தசையாலான பை தான் கருப்பை. இனப்பெருக்கத்தில் இது செய்யும் பணி அதிசயமானது. 50 கிராம் எடைகொண்ட கருப்பை, கருவை உள்வாங்கி, அதைவிட பலமடங்கு கொண்ட குழந்தையாக வளர்த்தெடுக்கிறது.
 
ஆணின் உயிரணுவும், பெண்ணின் சினைமுட்டையும் சந்தித்து, கருக்குழாயில் கருவாகிறது. அந்த கரு, கருப்பைக்குள் சென்று பதியமாகி சிசுவாகி, குழந்தையாக வளருகிறது. கருப்பையின் மேல் பகுதியில், இருபுறமும் இரு சினைப்பைகள் உள்ளன. இதில் இருந்துதான் மாதந்தோறும் சினைமுட்டை வெளிவருகிறது. பெண்ணின் இனப்பெருக்க உறுப்புகளில் பெலோப்பியன் டியூப் எனப்படும் கருக்குழாயின் பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது. முடியைவிட மெலிதாக இருக்கும் இந்த குழாய்கள்தான் சினை முட்டையையும், உயிரணுவையும் சந்திக்க வைக்கவும்- கருவாக்கி- அதனை கருப்பைக்குள் அனுப்பும் பணியையும் செய்கின்றன. இதன் பணிகள் அனைத்தும் பிரமிக்கவைக்கின்றன.
 
பெண் பூப்படைவது மூலம் அவள் இனப்பெருக்கத்திற்கு தயாராகிவிட்டாள் என்பது உணர்த்தப்படுகிறது. பெண்ணின் ஒவ்வொரு மாதவிலக்கு சுழற்சி காலத்திலும் சினை முட்டை முதிர்ந்து வெடித்து வெளியே வருகிறது. அது ஆணின் உயிரணுவோடு சேர்ந்து கருவாகும் சூழல் உருவாகிறது. சினைமுட்டை வெளியேறும் ஒவ்வொரு மாதமும் ஈஸ்்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் ஆகிய ஹார்மோன்கள் கருப்பைக்குள் என்டோமெட்ரியம் என்ற பஞ்சுப்பொதி போன்ற மென்பொருளை உருவாக்குகிறது. கருப்பைக்குள் வரும் கரு வளர படுக்கை அமைத்துக்கொடுப்பது போன்ற பணியை என்டோமெட்ரியம் செய்யும். ஆனால் ஆணும், பெண்ணும் இணையாவிட் டால் கருத்தரிப்பு அங்கே நிகழாது. அதனால் என்டோமெட்ரியத்திற்கு அங்கே வேலையில்லை. அதனால் அது ரத்தத்தோடு மாதந்தோறும் வெளியேறும். அப்படி வெளியேற்றப்படுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். கர்ப்ப காலத்தில் மாதவிலக்கு தோன்றாது.
 
அதிசயங்கள் நிறைந்த சுரங்கமாக இருக்கும் மனித உடலில் இனப்பெருக்க செயல்பாடுகள் பல்வேறு ஆச்சரியங்களை அரங்கேற்றுகின்றன. இந்த அதிசயங்களை பார்த்து மலைத்து, சிலிர்த்துப்போவதைவிட இந்த அற்புத உயிர் இயந்திரத்தின் இயக்கத்தில் எந்த கோளாறும் (நோயும்) வராமல் பார்த்துக்கொள்வதுதான் நாம் நமது உடலுக்கு செய்யும் மரியாதையாகும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்