Paristamil Navigation Paristamil advert login

பெஞ்சமின் புயல்! - 100,000 வீடுகளுக்கு மின் தடை, மீட்புப்பணிகள் தீவிரம்..!!

பெஞ்சமின் புயல்! - 100,000 வீடுகளுக்கு மின் தடை, மீட்புப்பணிகள் தீவிரம்..!!

23 ஐப்பசி 2025 வியாழன் 11:19 | பார்வைகள் : 1121


நேற்று ஒக்டோபர் 22, இரவு முதல் பிரான்சை 'பெஞ்சமின்' என பெயரிடப்பட்ட புயல் தாக்கி வருகிறது.  100,000 வீடுகள் மின் தடையை சந்தித்துள்ளன.

குறிப்பாக Nouvelle-Aquitaine, Burgundy-Franche-Comté, Auvergne-Rhône-Alpes போன்ற மாவட்டங்களில் பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகிறது. மரம் முறிவுகளால் மின் தடை மற்றும் தொலைபேசி இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.

● மின் தடங்கலை சீர் செய்ய 1,000 வரையான Enedis ஊழியர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.

புயல் காரணமாக 99 மாவட்டங்களுக்கு மஞ்சள் மற்றும் செம்மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. இல்-து-பிரான்ஸ் மாகாணம் முழுவதற்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

● Alpes-Maritimes, Aude, Charente-Maritime, Haute-Corse, Corse-du-Sud, Gironde, Landes, Manche, Nord, Pas-de-Calais, Pyrénées-Atlantiques, Pyrénées-Orientales, Seine-Maritime, Deux-Sèvres, Somme மற்றும் Vendée ஆகிய 17 மாவட்டங்களுக்கு 'செம்மஞ்சள்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

● Fécamp நகரில் இன்று காலை 161 கி.மீ வேகத்தில் புயல் பதிவானது.

● மாகாணங்களை இணைக்கும் TER சேவைகள் பல நிறுத்தப்பட்டுள்ளன.

● புயல் தொடர்பாக அனைத்து மக்களும் விழிப்பாகவும், அவதானத்துடனும் இருக்குமாறு உள்துறை அமைச்சர் Laurent Nuñez அறிவுறுத்தியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்