Paristamil Navigation Paristamil advert login

சேமிப்புக்கணக்கில் இருந்து பெருவாரியாக பணத்தை எடுக்கும் மக்கள்!!

சேமிப்புக்கணக்கில் இருந்து பெருவாரியாக பணத்தை எடுக்கும் மக்கள்!!

24 கார்த்திகை 2025 திங்கள் 18:55 | பார்வைகள் : 460


Livret A சேமிப்புக்கணக்கில் இருந்து பிரெஞ்சு மக்கள் பணத்தை எடுக்கும் பழக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த சேமிப்புக்கணக்கில் பல பில்லியன் யூரோக்கள் தேடுவாரற்றுக்கிடந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பணவீக்கம் காரணமாக அதன் வட்டி வீதம் சடுதியாக அதிகரித்திருந்தது. ஆனால் துரஷிட்டவசமாக மக்கள் சேமிப்புக்கணக்கில் இருந்து பணத்தினை எடுக்கும் பழக்கத்தை அதிகமாக மேற்கொண்டனர். 

இவ்வருடத்தின் மட்டும் 3.81 பில்லியன் யூரோக்கள் பணத்தினை பிரெஞ்சு மக்கள் எடுத்துள்ளனர். அதேவேளை, இவ்வாண்டில் மொத்தமாக 58 மில்லியன் யூரோக்கள் மட்டுமே வைப்பிலிட்டு சேமித்திருந்ததனர்.

Caisse des Dépôts நிறுவனம் இத்தகவலை இன்று வெளியிட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டில் மொத்தமாக 3.77 பில்லியன் யூரோக்கள் தரவிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்