மேயர்களுக்கு ஆண்டுதோறும் போணஸ் : நகராட்சி நிர்வாகத்தை எளிமைப்படுத்த லெகோர்னுவின் நடவடிக்கைகள்!!
24 கார்த்திகை 2025 திங்கள் 14:11 | பார்வைகள் : 255
பிரதமர் செபாஸ்தியன் லெகோர்னு, மேயர்கள் அரசின் பெயரில் எடுக்கும் தீர்மானங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில், ஒவ்வொரு மேயருக்கும் ஆண்டுக்கு 500 யூரோக்கள் «régalienne » ஊக்கத்தொகை வழங்கும் யோசனையை அறிவித்துள்ளார்.
மேயர்கள் தொடர்ந்து அதிக அபாயங்களை எதிர்கொள்ளும் நிலையில், அந்த அபாயம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நகராட்சிகளின் பணியை எளிமைப்படுத்துவதற்காக, Noël க்குள் 30-க்கும் மேற்பட்ட «அபத்தமான» விதிகளை நீக்கும் ஒரு பெரிய அரசாணை வெளியிடத் திட்டமிட்டுள்ளார்; ஜனவரி மற்றும் பிப்ரவரியில் மேலும் 70 விதிகள் ரத்து செய்யப்பட உள்ளன.
பாராளுமன்றத்தில் தனது பட்ஜெட்டிற்கான பெரும்பான்மை ஆதரவு இல்லாத நிலையைக் கவனத்தில் கொண்டு, லெகோர்னு தற்போதைய «அரசியல் குழப்பத்தை» கடுமையாக விமர்சித்துள்ளார். ஜனநாயகத்தை காப்பாற்றவும், நாட்டிற்கான நல்ல முடிவுகளைப் பெறவும் சமரசம் அவசியம் என அவர் வலியுறுத்திள்ளார்.
சமூக முன்னேற்றமும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான மேம்பாடுகளும் அரசியல் குழப்பத்தின் சூழலில் உருவாக முடியாது என்றும், கடினமான சர்வதேச சூழலில் பிரான்ஸ் இப்படியான நிலையால் பலவீனப்படக்கூடாது என்பதையும் அவர் எச்சரித்துள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan