Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

 கனடாவில் தந்தையை சுட்டுக் கொன்ற மகன்

24 கார்த்திகை 2025 திங்கள் 09:02 | பார்வைகள் : 267


கனடாவில் நபர் ஒருவர் தனது தந்தையை சுட்டுக் கொன்று தலைமறைவாகியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பிராம்ப்டன் நகரில் சனிக்கிழமை பிற்பகல் ஒரு வீட்டு வளாகத்தில் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக உயிரிழந்தவரின் 25 வயது மகன் நிக்கோலஸ் ஜாக்லால் (Nicholas Jaglal) மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சனிக்கிழமை மாலை 3.15 மணியளவில் கிளியர்ஜோய் வீதி பகுதியில் உள்ள வீட்டில் ஏற்பட்ட குழப்பம் குறித்து அழைப்பு வந்தது.

அங்கு சென்ற அதிகாரிகள், 50 வயதுடைய ஒருவரை துப்பாக்கிச்சூட்டில் கடுமையாக காயமடைந்த நிலையில் கண்டனர்.

அவசர உதவிகள் வழங்கப்பட்டபோதும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டு சந்தேகநபர் இந்த முகவரியுடன் தொடர்புடையவர்.

அவர் அங்கு முழு நேரம் வசித்தாரா அல்லது அடிக்கடி வருபவரா என்பது இன்னும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தேடி வருவதாகவும் விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரின் கைகளில் ஆயுதம் இருப்பதால் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்